தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் இயக்குனர் ஆனதும் முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.
16 வயதினிலே படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களைப் படம் பார்த்து திகைக்க வைக்கும் இருந்தது. பாரதிராஜாவின் அட்டகாசமான விஷுவல்கள், இளையராஜாவின் உள்ளத்தைத் தொடும் இசை, ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவியின் அட்டகாசமான நடிப்பு என ஒவ்வொன்றும் மிளிர்ந்தது. இந்த படத்துக்கு முன்பு வரை கமல்ஹாசன் ஒரு சாக்லேட் பாயாக, பெண்கள் ரசித்துப் பார்க்கும் நடிகராக இருந்தார்.

அதன் பின்னரும் அவர் வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் விஷூவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதுதான் இப்போதுவரை அவருடைய ஸ்டைலாக உள்ளது. பாரதிராஜா இயக்குனராக இருந்த போது அவரை எதிர்த்து அவரின் டைரக்ஷன் ஸ்டைலை ஒருசிலர் மட்டுமே விமர்சனம் வைப்பார்கள். அப்படி ஒருவர்தான் அவரின் உதவி இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன்.
ஒரு கைதியின் டைரி படத்தை பாரதிராஜா ஷூட் செய்யும்போது அவர் பாரதிராஜாவிடம் “சார் இது உங்க வழக்கமான ஸ்டைல் படம் இல்லை. மற்ற படங்களில் ஹீரொயினின் க்ளோஸ் அப் காட்சிகளைப் போட்டு அழகான ஷாட்களாகப் போட்டு எடுப்பதைப் போல இந்த படத்தில் எடுக்கமுடியாது” என விவாதிப்பாராம். இதை நடிகர் பார்த்திபன் நேரில் பார்த்து ஆச்சர்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
