சனிக்கிழமைதோறும் இது நடக்குது.. அதிமுகவினர் எச்சரிக்கையா இருங்க… குண்டை தூக்கிப்போட்ட மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!!

Spread the love

தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வரும் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தவெக தலைவர் விஜய் மீதும், அவரது தலைமையிலான அரசு மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெற்றுள்ள 35 சதவீத வாக்குகள் என்பது வெறும் சினிமா கவர்ச்சியால் மட்டுமே வந்தது என்றும், அது எப்போதும் நிரந்தரமானது அல்ல என்றும் அவர் சாடியுள்ளார். மீதமுள்ள 65 சதவீத மக்கள் விஜயை முற்றிலுமாக எதிர்த்துள்ளதை புள்ளிவிவரங்களோடு சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய விஜய் அரசு மின்வெட்டுப் பிரச்சினை, விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்காமை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றால் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தவெக-வின் தற்போதைய அரசியல் நகர்வுகளையும், உறுப்பினர் சேர்க்கை உத்திகளையும் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக எச்சரித்துள்ளார். “சனிக்கிழமை தோறும் ஆள் பிடிக்கும்” வேலையை தவெக கையில் எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாற்றுக் கட்சியினரை இழுக்க அவர்கள் வீசும் தூண்டிலில் பாரம்பரியமிக்க அதிமுக தொண்டர்களோ அல்லது நிர்வாகிகளோ எக்காரணம் கொண்டும் விழுந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தவெக-வின் கவர்ச்சி அரசியலை நம்பாமல், அதிமுகவினர் தங்களது அரசியல் பாதையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

11 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

20 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

25 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

36 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

47 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

1 மணத்தியாலம் ago