“மைனர் பெண்ணிடம் அத்துமீறய… கால்பந்து பயிற்சியாளர் போக்சோ சட்டத்தில் சிக்கி கைது… மகாராஷ்டிராவில் பரபரப்பு…!”

Spread the love

மகாராஷ்டிராவின் பால்ஹர் மாவட்டத்தில் அபிஜித் மெண்டல் என்பவர் தனியார் கால்பந்து பயிற்சி அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். கால்பந்து விளையாட்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக, அங்கு பயிற்சிக்கு வரும் இளம் வீரர், வீராங்கனைகளிடம் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த ஆசை வார்த்தைகளை நம்பி, அங்கு பயிற்சிக்குச் சேர்ந்த 17 வயது சிறுமி வீராங்கனையின் நம்பிக்கையைத் தன்வசப்படுத்தி, அந்த பயிற்சியாளர் அவரைத் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியை ஏமாற்றியதோடு மட்டுமன்றி, அவரின் சில தனிப்பட்ட வீடியோக்களையும் அந்தப் பயிற்சியாளர் வைத்துள்ளார். “நான் சொல்லும் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும், இல்லையென்றால் உன்னுடைய இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி உனது வாழ்க்கையை அழித்துவிடுவேன்” என்று அந்தச் சிறுமியைப் பயமுறுத்தி, தொடர் மிரட்டல்களையும் பிளாக்மெயில்களையும் அவர் செய்துள்ள

பயிற்சியாளரின் இந்தத் தொடர் அச்சுறுத்தல்களால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சிறுமி, இறுதியாகத் துணிச்சலுடன் மணிக்பூர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். தனது புகாரில், “அவரின் தவறான கோரிக்கைகளுக்கு நான் இணங்கவில்லை என்றால், அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டுகிறார்” என்று பாதிக்கப்பட்டு கதறியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

8 seconds ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

9 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

11 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

18 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

21 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

25 minutes ago