ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச்சந்தை அறிமுகத்தைத் தொடர்ந்து, உலகின் முதல் ட்ரில்லியனராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற வர்த்தகத்தின் முடிவில், இவரது சொத்து மதிப்பு 1.1 ட்ரில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ₹92 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் கணித்துள்ளது. இதன் மூலம், உலகின் இரண்டாவது கோடீஸ்வரரான கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜை விட (294 பில்லியன் டாலர்) மஸ்க் பல மடங்கு முன்னிலையில் உள்ளார்.
இந்த 1 ட்ரில்லியன் டாலர் என்ற பிரம்மாண்டமான தொகையைக் கொண்டு அமெரிக்காவில் தற்போதைய சந்தை விலையில் சுமார் 25 லட்சம் வீடுகளை விலைக்கு வாங்க முடியும். மேலும், உலக மக்கள் தொகை முழுமைக்கும் இதனைப் பிரித்துக் கொடுத்தால் தலா 122 டாலர் (சுமார் ₹10,000) வழங்க முடியும். மஸ்க் பிறந்த நாடான தென்னாப்பிரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மஸ்கிற்கு அடுத்தபடியாக உள்ள லாரி பேஜ், செர்ஜி பிரின், ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரி எலிசன் ஆகிய 4 உலகப் பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை இணைத்தாலும் அது 1.05 ட்ரில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. விண்வெளித் துறையில் ஸ்பேஸ்எக்ஸ் நிகழ்த்திய அசுர வளர்ச்சியே மஸ்க்கின் இந்த அசாத்திய சொத்து உயர்வுக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…