16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் பாரதிராஜா. இவர் பெரும்பாலும் புதுமுக ஹீரோக்களை வைத்து படத்தை எடுப்பார். அப்படி பல நடிகைகளையும் இவர் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவரால் அறிமுகம் செய்தவர்கள் பலர் இன்று முன்னணி நடிகர்களாகவும் நடிகைகளாகவும் மாறி உள்ளனர். அதனைப் போலவே சினிமாவிலும் திறமையான கலைஞர்களாகவும் வளர்ந்து நிற்கிறார்கள். இவருடைய காலத்தில் தற்போது இருக்கின்ற மாதிரி பெரிய பெரிய பட்ஜெட்டில் எல்லாம் படங்கள் எடுக்கப்படவில்லை. குறுகிய பட்ஜெட்டில் நல்ல கதைகளும் கொண்ட படங்களாகவே வெளிவந்து அந்த படங்களும் மாபெரும் வெற்றி அடைந்து பட்ஜெட்டை விட அதிகமான வசூலை தயாரிப்பாளர்களுக்கு ஈட்டி தந்துள்ளது.
இன்றைய சூழலில் ஒரு நடிகருக்கோ அல்லது நடிகை கோலி கணக்கில் பணத்தை செலவிட வேண்டி உள்ளது. ஆனால் பாரதிராஜா, பாலச்சந்தர் மற்றும் பாக்கியராஜ் இவர்களின் காலத்தில் சில லட்சங்களில் படத்தை முடித்து அந்த படத்தையும் வெற்றி படங்களாக்கி உள்ளனர். அதன்படி ஒரு லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து அந்த படத்தை மாபெரும் வெற்றி ஆக்கியுள்ளார் பாரதிராஜா. அந்தத் திரைப்படம் தான் புதிய வார்ப்புகள்.
முதலில் இந்த படத்தில் புதுமுக நாயகன் நாயகியே நடிக்க வைக்க பாரதிராஜா திட்டமிட்டு இருந்த நிலையில் நடிகர்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த பாக்கியராஜ் இந்த படத்தில் நாயகனாக போடலாம் என்ற எண்ணம் பாரதிராஜாவுக்கு வந்தது. அதன் பிறகு பாக்கியராஜ் நடித்து அவருக்கு ஜோடியாக ரதி நடிக்க உருவான திரைப்படம் தான் புதிய வார்ப்புகள். இந்த படத்திற்காக இளையராஜா புதுப்புது புத்திகளை யோசித்து சிறப்பாக இசையமைத்திருந்தார்.
இப்படியான நிலையில் புதிய வார்ப்புகள் படத்திற்கான மொத்த பட்ஜெட் எவ்வளவு அதை எப்படி திட்டமிட்டு எடுத்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு 32 நாட்கள் தான் நடந்ததாம். ஒரு நாளைக்கு 3000 ரூபாய் என்ற வீதத்தில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அந்த வகையில் மொத்தமே 96 ஆயிரம் ரூபாய் செலவில் தான் மொத்த படப்பிடிப்பையும் எடுத்து முடித்துள்ளனர். இதைப் பற்றி சித்ரா லட்சுமணன் மேலும் கூறும்போது லட்சத்திற்கு குறைவான அளவில் படத்தை எடுத்து 18 லட்சம் வரை இந்த படம் வசூலை குவித்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…