Categories: சினிமா

சிம்புதான் அடுத்த சகலகலா வல்லவன்… பிரபலத் தயாரிப்பாளர் கொடுத்த சான்றிதழ்!

Spread the love

தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவரிடம் இருக்கும் சில பிரச்சனைகள் காரணமாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்காமல் சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் மீது பல புகார்கள் எழுந்தன. அவர் சரியாக படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனவும் டப்பிங்கிற்கு கூட வர மறுக்கிறார் எனவும் தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர். குறிப்பாக அவரை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்புவின் குற்றச்சாட்டு வைத்து  அவருக்கு ரெட் கார்ட் போடும் அளவுக்கு சென்றது. இன்னும் அந்த பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.

அதே போல சிம்பு ஒரு படத்தை ஆர்வமாக ஆரம்பிப்பார். ஆனால் பாதி ஷூட்டிங் முடிந்ததும் படம் அவருக்கு திருப்தியாக இல்லை என்று நிறுத்தி விடுவார். இப்படி பல படங்கள் அவர் நடிப்பில் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. வேட்டை மன்னன், கெட்டவன் மற்றும் கான் ஆகிய படங்களே இதற்கு உதாரணம்.

அதனால் தன்னுடைய சக நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோரின் மார்க்கெட் எங்கேயோ இருக்க சிம்பு அவர்களை விட பல மடங்கு பின் தங்கி இருக்கிறார். இந்ந்நிலையில் சிம்புவின் உறவினரும், நடிகரும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி ஒரு நேர்காணலில் சிம்புவைப் பற்றி பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

அதில் “சிம்புவுக்கு சினிமாவில் தெரியாதது என்ன இருக்கு? அவருக்கு இசை தெரியும். பாடல் எழுதத் தெரியும். என்னைப் பொறுத்தவரை அவர்தான் கமல்சாருக்கு அடுத்து. அவர்தான் அடுத்த சகலகலா வல்லவன். அவருடைய நேரம். இப்போது கொஞ்சம் பின் தங்கியுள்ளார். ஆனால் அவருக்கு இன்னும் வயது உள்ளது. அதனால் அவர் கண்டிப்பாக பெரிய இடத்துக்கு வருவார்” எனக் கூறியுள்ளார் .

vinoth

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

3 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

3 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

3 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

3 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

3 மணத்தியாலங்கள் ago