சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் காரில் வெளியேற முயன்றபோது, தூத்துக்குடியைச் சேர்ந்த அதிருப்தி நிர்வாகிகள் அவரது காரை மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா, தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் இன்று காலை முதலே கட்சி அலுவலகத்தின் முன்பு தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்தார். கட்சிப் பதவிகள் நியமனத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி அவர் கண்ணீர் மல்க அங்கேயே அமர்ந்திருந்தார்.
கட்சி அலுவலகத்திலிருந்து விஜய் தனது காரில் கிளம்பியபோது, அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென காரை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரை நிறுத்த முயன்ற தொண்டர்களை விலக்கிவிட்டு, கார் மெதுவாக நகர்ந்து சென்றது. அப்போது காரின் முன்பகுதியில் தொண்டர்கள் சிலர் மோதியபடி நின்றதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கட்சிப் பதவிகள் தொடர்பாகத் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், தலைவரின் காரையே தொண்டர்கள் மறித்த இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…
ஐரோப்பிய நாடுகளில் பிரான்சின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தும் திட்டத்திற்கு ரஷ்யா கடும்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே, ஹடாப்சர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் விளையாடச் சென்ற 4 வயது சிறுமி, இரும்புச்…