“முன்பை விட இந்த முறை மிக மோசமாக இருக்கும்” ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் இஸ்ரேல்… இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பகீர் எச்சரிக்கை..!!

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை ஒருதலைபட்சமாக நீட்டிப்பதாக அறிவித்தாலும், ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையை காரணம் காட்டி ஈரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்து வருகிறது. இந்தச் சூழலில், ஈரானின் பிடிவாதப் போக்கிற்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் போர்க்கோலம் பூண்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய படைகள் தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் முடித்துவிட்டதாகவும், தாக்குதலுக்குரிய இலக்குகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஈரானின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள காமேனி குடும்பத்தை முழுமையாக குறிவைக்கத் தயாராக இருப்பதாகவும், இதற்காக அமெரிக்காவின் பச்சைக்கொடிக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது ஈரானின் அரசியல் தலைமைக்கு விடப்பட்ட நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானை முழுவதுமாக இருளுக்குள் தள்ளும் வகையில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் மின்சார உள்கட்டமைப்புகளைச் சிதைத்து, பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்குவதே இஸ்ரேலின் திட்டம் என்று காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். “இந்த முறை தாக்குதலானது மிகவும் வித்தியாசமானதாகவும், கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பயங்கரமானதாகவும் இருக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரானின் அணுசக்தி மற்றும் பொருளாதார மையங்கள் மீதான இந்த அச்சுறுத்தல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago