Connect with us

TRENDING

சந்திராயன் 3 வெற்றி நாயகன்…. திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேல் சம்பளம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்…!!

இஸ்ரோவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது .அதன் பிறகு சந்திராயன்-3 வெளியிட்ட ஆய்வு முடிவுகள், புகைப்படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தது. இஸ்ரோவின் செயலாளரும் தலைவருமான எஸ்.சோமநாத், சந்திராயன் 3-யின் திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேல், சந்திராயன்-3 திட்டத்திற்கான துணை திட்ட இயக்குனராக இருந்த கல்பனா காளஹஸ்தி ஆகியோர் சந்திராயன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் முக்கிய அதிகாரிகள் ஆவர்.

   

இஸ்ரோவில் பொறியாளர்களுக்கு மாதம் 37,400 முதல் 67,000 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மூத்த விஞ்ஞானிகளுக்கு 75,000 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரையும் வழங்கப்படுகிறது. அதிக திறமை கொண்ட விஞ்ஞானிகளுக்கு மாதம் 2 லட்ச ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

சிறந்த விஞ்ஞானிகளுக்கு 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயும், H பிரிவு பொறியாளர்களுக்கு 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயும், பொறியாளர் எஸ்.ஜிக்கு 1 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயும், விஞ்ஞானி/பொறியாளர் எஸ்.எப் 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வாங்குகின்றனர். இதனை வைத்து பார்த்தால் சந்திராயன் மூன்றின் திட்ட இயக்குனர் பி. வீரமுத்துவேல் அவர்கள் மாதம் 3 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறக்கூடும் என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

author avatar
Priya Ram
Continue Reading

More in TRENDING

To Top