ஹீரோயின்ஸ் எல்லாம் ஓரமா போங்க-பா.. இணையத்தை கலக்கும் அட்லீ மனைவி ப்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

By Archana on மார்ச் 9, 2024

Spread the love

“ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பிகில், மெர்சல், தெறி உள்ளிட்ட படங்களின் மூலம் தென்னிந்தியா சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமான இயக்குனர் அட்லீ அவர்கள். ஷங்கரிடம் அஸிஸ்டண்ட்-ஆக பணியாற்றி தற்போது மிகவும் பேமஸ்-ஆன ஒரு இயக்குனராக வளம் வருகிறார் இயக்குனர் அட்லீ அவர்கள். மேலும், ஜவான் திரைப்படம் மூலமாக ஹிந்தி சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, ஒரு படத்தில் பான் இந்திய இயக்குனராக உருவெடுத்தார்.

   

ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு இயக்குனராக மாறிவிட்டார் அட்லீ. அதற்க்கு காரணம் நடிகர் ஷாருக்கானை வைத்து இவர் எடுத்த ஜவான் திரைப்படம் தான். அட்லீ நடிகை ப்ரியாவை கடந்த 2014 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2023 -ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார் அவருடைய பெயர் மீர். பிரியா அட்லீ அவர்கள் சிங்கம், மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

 

அதுமட்டுமில்லாமல், பேபி ஜான், அந்தகாரம் உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார் பிரியா அட்லீ அவர்கள். சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது பிரியா அட்லீ அவர்கள் மினுமினுக்கு ட்ரெஸ்ஸில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.