சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட பிரவீன் சக்கரவர்த்தி, பிட்ஸ் பிலானியில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்ற பொருளாதார மற்றும் தரவு மேலாண்மை வல்லுநர் ஆவார். ஐபிஎம், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய இவர், 2009 முதல் மன்மோகன் சிங் அரசாங்கத்தின் தொழில்நுட்பக் குழுக்களில் பங்காற்றினார். பின்னர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2019 தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டு ராகுலின் நம்பிக்கைக்குரிய நெருங்கிய ஆலோசகரானார்.
தமிழக அரசியலில் கவனம் செலுத்தி வந்த இவர், கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட முயன்றார். தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க தீவிரமாகச் செயல்பட்டதுடன், விஜயின் வெற்றிக்குப் பின் அவருக்கு ஆதரவு அளிக்கவும் ராகுல் காந்தியை வலியுறுத்தினார். விஜய் மற்றும் ராகுல் இருவரிடமும் நெருக்கமான செல்வாக்கைப் பெற்றதன் மூலம் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்வானார்.
தற்போது மத்திய அரசியலைக் காட்டிலும் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட விரும்பும் பிரவீன் சக்கரவர்த்தி, எம்.எல்.ஏ.வாகி தமிழக அமைச்சரவையில் இடம்பெற ஆசைப்படுகிறார். இவரது பொருளாதார பின்னணி காரணமாக முதல்வர் விஜயும் இவரைத் தனது அமைச்சரவையில் சேர்க்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிடவும் அவர் தயாராக உள்ளார்.
பெங்களூரு மற்றும் மங்களூரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டங்கள் தற்போது தீவிரமாக நடைபெற்று…
வேலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக வெற்றி பெற்ற கழகம் தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்த…
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ, டாக்ஸி மற்றும் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் மராத்தி மொழி தெரிந்திருக்க…
தமிழக அரசியலில் பொதுவாழ்வுக்கு வரும் பெண்கள், கொள்கை ரீதியான விவாதங்களை விடவும் அவர்களின் தோற்றம், உடை மற்றும் பேச்சுநடைக் காகவே…
சமீபத்தில் அருணிகா யாதவ் என்ற பெண், ரயிலில் பயணம் செய்தபடியே தனது அலுவலக வேலைகளைத் தடையின்றி செய்வதற்காகப் பயன்படுத்திய சுவாரஸ்யமான…
மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்ட சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களைச் சந்தித்து…