அய்யய்யோ… கட்சிக்குள் அடுத்த பூகம்பம்… இபிஎஸ்-க்கு எதிராக வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பகிரங்கப் போர்… அதிமுகவில் பெரும் அதிர்ச்சி…!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி.வேலுமணி எழுதியுள்ள கடிதத்தில், 2021, 2026 சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறப் பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், எடுக்கப்பட்ட தவறான தன்னிச்சையான முடிவுகளால் தொடர் தோல்விகள் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தகைய தொடர் சரிவுகள் கட்சி நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் மிகுந்த சோர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த நிலையிலிருந்து கட்சி மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்று அவர்கள் ஏங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கோவை, திருப்பூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிர்வாகிகளைக் காரணமின்றி பொறுப்புகளிலிருந்து விடுவித்து புதியவர்களை நியமிப்பது கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தங்களின் செயல்பாடுகளுக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்து தெரிவிக்கக் கூடாது என்ற நோக்கில், கட்சி விதிகளுக்கு முரணாக இதுவரை 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு நீண்ட காலம் இருந்தாலும், 6 மாதத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் அடிமட்டத் தொண்டர்களுக்கும் கிளைக் கழகச் செயலாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது என்பதால் கட்சியை உடனடியாகப் பலப்படுத்த வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளனர். எனவே, அதிமுகவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற கொள்கை அடிப்படையில், மே 13-க்குப் பிறகு பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதே பொறுப்புகளை வழங்கி கட்சியை வலுப்படுத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Swetha

Recent Posts

குஷியோ குஷி… குடும்பத்தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.3000…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்….!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3 வீட்டு…

14 seconds ago

“47-ல் 6 போச்சு.. இப்போ 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம்?”….. எடப்பாடி தலையில் இடியை இறங்கிய செங்கோட்டையன்…. பரபரப்பு பேட்டி….!

தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…

4 minutes ago

“1 வாரம்தான் டைம்…. அதுக்குள்ள இத பண்ணனும் இல்லனா?”…. முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் விதித்த கெடு… பற்றி எரியும் தமிழக அரசியல் களம்….!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…

10 minutes ago

“பல ஆண்டுகளாக பிச்சை எடுத்த மூதாட்டி…” வீட்டில் சிக்கிய ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம்…. மறைவுக்குப் பின் வெளிவந்த மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை…!!

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…

40 minutes ago

பார்த்தாலே உடம்பு நடுங்கும்..! மரமாக மாறும் மனிதர்… உலகையே மிரள வைத்த விசித்திர நோய்… வாழ்நாள் முழுவதும் தீராத வேதனை…!!

'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…

48 minutes ago

BIG BREAKING: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்… சற்று முன் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…

56 minutes ago