“மும்பையில் புது ரூல்ஸ்”..! மராத்தி தெரியலைனா ஆட்டோ ஓட்ட முடியாது… அதிரடி உத்தரவால் அரசுக்கு எதிராக பொங்கிய வெளிமாநில டிரைவர்கள்…!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ, டாக்ஸி மற்றும் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற புதிய விதியை அம்மாநில போக்குவரத்துத் துறை சமீபத்தில் தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மராத்தி பேசத் தெரியாத வெளிமாநில ஓட்டுநர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பிழைப்பு தேடி மும்பை வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மராத்தி மொழி தெரியாத காரணத்தினால் தனது வாழ்வாதாரம் பறிபோய்விடும் என்று அஞ்சி தனது ஆட்டோவில் அமர்ந்தபடி கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ள ஓட்டுநர், மராத்தி பேசத் தெரியவில்லை என்றால் 10,000 முதல் 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழியையே சரிவர படிக்கத் தெரியாத பாமர மக்களான தங்களால், ஒரே மாதத்தில் எப்படி புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பும் அவர், மொழியை கற்பதற்கு அரசு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், ஏழைத் தொழிலாளர்களின் நிலைக்கு அனுதாபப்பட்டும், அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை விமர்சித்தும் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Gayathri

Recent Posts

புது முயற்சி..! ‘ஹலோ கிட்டி’ பொம்மைகளா?… பெண்களுக்கென பிரத்யேக மதுபான கவுண்டர்… நெட்டிசன்களைக் கவர்ந்த க்யூட் அலங்காரம்…!!

தலைநகர் டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையில், பெண் வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தொடங்கப்பட்டுள்ள தனி கவுண்டர் சமூக…

2 minutes ago

“ஸ்டாலின் செருப்புதான் தமிழகத்தை ஆள்கிறதா?”…. திருமண மேடையில் லியோனி சர்ச்சைப் பேச்சு…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழகத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாவில்…

5 minutes ago

“குடிக்க தண்ணி கொடுங்கடா!”… அலுவலகத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய நபர்… பற்றி எரியும் சர்ச்சை… இணையத்தில் தெறிக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அகமதுபூர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், அப்பகுதி நகராட்சி அலுவலகத்தில்…

10 minutes ago

BREAKING: எடப்பாடிக்கு ஷாக் மேல் ஷாக்… அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியம்….!

மதுரை மாநகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த 15 கவுன்சிலர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில்…

12 minutes ago

புனித பொருளா?… திட்டமிட்ட ஏமாற்று வேலையா?… அதிர்ஷ்டம் தருமா இந்த மர்ம பை?… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மற்றும் மங்களப் பொருட்கள் வெறும் ஜடப்பொருட்கள் அல்ல; அவை மனித மனங்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும், நேர்மறை…

18 minutes ago

“கொளத்தூர் தோல்விக்குப் பின் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்”… அறிவாலயத்தில் நடந்த ரகசிய ஆலோசனை…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்….!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி, தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. புதிதாகக்…

25 minutes ago