புன்னகை அரசி என்ற பட்டத்தை கே ஆர் விஜயாவுக்கு அடுத்து தனக்கு சொந்தமாக்கி கொண்டவர் நடிகை சினேகா. தனது வசீகரமான சிரித்த முகத்துடன் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். இவர் 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இங்கே ஒரு நீலபட்சி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து தமிழில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக விரும்புகிறேன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ், ஸ்ரீகாந்த் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார்.
இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு விகான் என்கின்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கின்றனர். தற்போது நடிகை சினேகா ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகின்றார். இவர் இன்று தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இந்த அழகான இல்லதரசியின் பிறந்த நாளை முன்னிட்டு மிகவும் அழகான வீடியோவுடன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சினேகாவின் கணவர் பிரசன்னா இதற்கு முன்னதாக பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அதைத் தொடர்ந்து ஜோடியாக எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தையும் பகிர்ந்து தனது மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…
தமிழக அரசியல் வரலாறு 1967-ல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகளும் உலகளாவிய விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஜெமினி, சாட்ஜிபிடி,…
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்று மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…