தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவிலேயே மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற பெயருடன் வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். இயக்கியது நான்கு திரைப்படங்களாக இருந்தாலும் நான்கு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ள நிலையில் தற்போது அவர் இயக்கியுள்ள லியோ திரைப்படமும் மாசான வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கின்றார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஃபேன் இந்தியா திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கின்றது. இதனால் அக்டோபர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை ஆயுத பூஜை பண்டிகை விடுமுறை வரும் நிலையில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி லலித்குமார் மனுதாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவிற்கு அனுமதி வழங்கி இருக்கிறது தமிழக அரசு. இதனால் அக்டோபர் 19ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அவரது பட குழுவினருடன் இணைந்து திருப்பதிக்கு சென்று இருக்கிறார். அதில் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரை நடந்தே சென்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை இயக்குனர் ரத்தினகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…