விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த வார இறுதி ஹாட் டாபிக்காக மாறியது ஜோவிகா விசித்ரா சண்டை தான். கடந்த வார நாமினேஷனில் பவா செல்லதுரை, அனன்யா, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் இருக்கின்றனர். இதில் அனன்யா முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.
இவரைத்தொடர்ந்து பவா செல்லத்துரை சுயவிருப்பதின் பேரில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியானது பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தினம் ஒரு சண்டையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வார பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டனாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அனன்யா பிக் பாஸ் வீட்டை பற்றி நிறைய விஷயங்களை பற்றி பகிர்ந்துள்ளார். குறிப்பாக பிரதீப் பற்றி கூறிய அவர் ‘ அவருடைய game ரொம்ப hurtful ஆ இருக்கும். சில சமயம் நல்ல மனிதராகவும், சில சமயம் கெட்ட மனிதராகவும் நடந்து கொள்கிறார். அவருக்கு யாரை பற்றியும் கவலை இல்லை. எதைப்பத்தியும் கவலை இல்லை. அவருக்கு game அ வின் பண்ணனும் அவ்ளோ தான். அவர் ஒரு சிங்கம் மாதிரி.’ என்று பிரதீப்பை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ….
https://www.youtube.com/shorts/fVPEy5bSPZg
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…