தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய் கட்சியில் இருந்து விலகும் செங்கோட்டையன்… பகீர் கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டையன் குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இத்தகைய சூழலில், அவர் கட்சியில் அதிருப்தியில் இருப்பதாக எழுந்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், செங்கோட்டையன்  தவெகவிலிருந்து வெளியேறும் மனநிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சிலரிடம் செங்கோட்டையன் தொலைபேசியில் பேசியதாகக் குறிப்பிட்ட விஜயபாஸ்கர், “நான் அவசரப்பட்டு தப்பான முடிவெடுத்துவிட்டேன், நீங்கள் அந்தத் தவறைச் செய்துவிடாதீர்கள்” என்று அவர் வருத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒரு மூத்த தலைவருக்கு தவெகவில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதே இந்த அதிருப்திக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய காரணத்தினால் செங்கோட்டையன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட அவர், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை ஏற்று தவெகவில் இணைந்தது அக்கட்சிக்குக் கூடுதல் பலமாகக் கருதப்பட்டது. இருப்பினும், தற்போது நிலவும் பிரச்சாரக் காலத்தில் அவருக்குத் தகுந்த முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற பேச்சுக்கள் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் தீவிரமாகச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். இச்சமயத்தில் விஜயபாஸ்கர் முன்வைத்துள்ள இந்த விமர்சனம், தவெகவின் உட்கட்சி விவகாரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அதிமுகவினர் கருதுகின்றனர். செங்கோட்டையன் தரப்பிலிருந்து இதற்கு அதிகாரப்பூர்வ மறுப்பு ஏதும் வராத நிலையில், அவர் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்குத் திரும்புவாரா அல்லது தவெகவிலேயே நீடிப்பாரா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின்பே தெரியவரும்.

Nanthini

Recent Posts

ஒருவழியா முடிவுக்கு வந்த பஞ்சாயத்து…. “இனிமேல் அந்த பேச்சுக்கே இடமில்லை”… இபிஎஸ், ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

: அதிமுகவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமை பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான…

3 minutes ago

“இந்த பாவத்திற்கு என்னை மன்னிச்சிடுங்க” 12 ஆண்டுகால சித்திரவதை.. மகளைத் தாக்கிய கணவனை.. தாய் செய்த கொடூரம்..!!

நீலத்திற்கும் தீன்தயாலுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தீன்தயால் தனது மனைவி நீலத்தை அடிக்கடி கொடுமைப்படுத்தியும்,…

13 minutes ago

“மெழுகுவர்த்தி பஞ்சாயத்து” இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல… மேயர் பிரியா பரபரப்பு விளக்கம்..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…

24 minutes ago

குழந்தை பிறந்த 10 நாளில்.. மருத்துவரின் ஆலோசனையும் மீறி வந்த என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. எம்எல்ஏ பல்லவி பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில்…

29 minutes ago

மேயர் பிரியா செய்த சதி… குத்துவிளக்கு ஏற்றுவதில் வெடித்த மோதல்… உண்மையை உடைத்த TVK பெண் எம்எல்ஏ..!!

சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில், மாநகராட்சி மேயர்…

35 minutes ago

அதிரும் அரசியல்..! திராவிடக் கட்சிகளின் ரகசிய உடன்பாடு..? விஜய்யை வீழ்த்த கைகோர்க்கும் திமுக – அதிமுக..!!

அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…

1 மணத்தியாலம் ago