Categories: சினிமா

“நல்லா இருங்க.. தீர விசாரிப்பதே மெய்”.. பிக் பாசிலிருந்து கமல் ஹாசனால் வெளியேற்றப்பட்ட பிரதீப் வெளியிட்ட சர்ச்சை பதிவு..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்க்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். இதில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில்  ரசிகர்களின் பெரும் ஆதரவை  பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் தான்  பிரதீப் ஆண்டனி. இந்த சீசன் துவங்கிய முதல் வாரத்தில் பிரதீப் ஆண்டனி பல விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் நிகழ்ச்சி செல்ல செல்ல அவருக்கு ஆதரவு கிடைத்தது. அவர் எதார்த்தமாக தான் இருக்கின்றார் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த சீசனில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களின் பிரதீப்பிற்கே அதிக ஆதரவு கிடைத்தது. ஒவ்வொருமுறை பிரதீப் நாமினேட் ஆன போது அவருக்கு அதிக வாக்குகளை செலுத்தி பிரதீப்பை ரசிகர்கள் காப்பாற்றி வந்தனர். பிரதீப் முதல் ஆளாக எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுகின்றார் என கமல் அறிவிக்கும் போது அங்கு இருக்கும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் பிரதீப்பிற்கு இவ்வளவு சப்போர்ட் இருக்கின்றதா? என அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் சில நாட்களாக பிரதீப் நடந்துகொள்ளும் விதம் ரசிகர்களுக்கு சற்று பிடிக்கவில்லை என்றே கூறலாம். எனினும் அவருக்கு தொடர்ந்து தங்களது ஆதரவையே கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  எபிசோடில் பிரதீப் மற்ற ஹவுஸ்மேட்களால்  டார்கெட் செய்யப்பட்டு ‘பெண்கள் பாதுகாப்பு’ என்ற அடிப்படையில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் கோபமான அவரது ஆதரவாளர்கள் கமலஹாசனுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்பொழுது பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள், பொதுமக்கள், அவருடைய ரசிகர்கள், பிரபலங்கள்  என பலரும் கமலஹாசனின் இந்த முடிவிற்கு எதிராக தங்களது  எதிர்ப்பை தொடர்ந்து இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதீப் முதல்முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய எதிர்ப்பை சூசகமாக தெரிவித்துள்ளார்.

அதாவது இன்று பிறந்தநாள் காணும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவிட்டு, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘ நான் உங்களுடைய பெரிய ரசிகன் கமல் சார். சத்தியமா சொல்றேன். உங்களுக்கு என்னுடைய 69 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நல்லா இருங்க. தீர விசாரிப்பதே மெய்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் நான் ஒரு முட்டாளுங்க என்ற பழைய பாடலின் வீடியோவையும் இதில் இணைத்துள்ளார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

6 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

13 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

21 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

28 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago