Categories: சினிமா

“யாராவது வேணும்னு செய்வாங்களா.. ஆனா நா செய்வன்”.. கமலுக்கே வார்னிங் விட்ட பிரதீப்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது ஏழாவது சீசன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இவர்களில் 5 போட்டியாளர்கள் வெளியேறி இருக்க, 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமாக இந்த சீசன் அமைந்துள்ளது.

பிக் பாஸ் வீடாக இரண்டாக பிரிந்ததிலிருந்ததே டாஸ்க் விளையாட்டிலும் பல புதுமைகள் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் தனித்தனியாக பிரிந்து விளையாடாமல் கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஒவ்வொருவராக தோற்கடித்து வருகின்றனர்.  எவிக்ஷன் லிஸ்டில் இருந்த பிரதீப் தான் அங்கிருந்த ஹவுஸ்மேட்கலால் டார்கெட் செய்யப்பட்டார். ஜோதிகா ,பூர்ணிமா, மாயா, ரவீனா என பல பெண் போட்டியாளர்கள் அவருக்கு எதிராக ரெட் கார்ட் கொடுக்க வலியுறுத்தினார்கள். அது மட்டுமின்றி பல ஆண் போட்டியாளர்களும் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற கெட்ட பெயருடன் பிக் பாஸ் வீட்டை விட்டு  ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நெட்டிசன்களால் இந்த முடிவு ஏற்கப்படவில்லை. அவருக்கு ஆதரவாக தற்போது வரை இணையத்தில் பல்வேறு பதிவுகளும் கமாண்டுகளும் வெளியாகி வருகிறது. இந்நிலையில்  பல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் நன்றி கூறும் விதமாக தனது X தள பக்கத்தில் வடிவேலு காமெடி ஒன்றை வைத்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் பிரதீப். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் அந்த ரெட் கார்டை வைத்து சுற்றி பெண்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகர் கமலஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்பொழுது நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருக்கு Warning கொடுத்துள்ளார் பிரதீப். அதாவது அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘ ‘ நான் உங்களுடைய பெரிய ரசிகன் கமல் சார். சத்தியமா சொல்றேன். உங்களுக்கு என்னுடைய 69 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நல்லா இருங்க. தீர விசாரிப்பதே மெய்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கமலஹாசன் நடித்த வசூல் ராஜா MBBS படத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்றை பதிவு செய்து அவருக்கே சூசகமாக வார்னிங்கும் கொடுத்துள்ளார். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

3 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

4 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

5 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

5 மணத்தியாலங்கள் ago