உலகையே அதிரவைத்த வீடியோ..! கேமரா முன்பே நண்டைச் சாப்பிட்டு உயிரிழந்த பிரபல யூடியூபர்… லைக்குகளுக்காக விபரீதம்…!!

Spread the love

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 51 வயதான பிரபல உணவு வலைப்பதிவர் (Food Blogger) எம்மா அமித், தனது யூடியூப் பக்கத்திற்காகத் தனித்துவமான வீடியோ எடுக்க நினைத்துச் செய்த ஒரு காரியம் அவரது உயிரையே பறித்துள்ளது. அடர்ந்த சதுப்பு நிலக் காட்டில் சாகசம் செய்யச் சென்ற அவர், அங்கு கண்டெடுத்த ஒரு விசித்திரமான நண்டைச் சமைத்துச் சாப்பிடும் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். ஆனால், அந்த நண்டு “டெவில் கிராப்” (Devil Crab) எனப்படும் உலகின் மிக நச்சுத்தன்மை வாய்ந்த உயிரினங்களில் ஒன்று என்பதை அவர் அறியவில்லை.

நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, அந்த நண்டின் உடலில் சைடாக்சின் (Saxitoxin) மற்றும் டெட்ரோடோடாக்சின் (Tetrodotoxin) போன்ற மனிதர்களைக் கொல்லக்கூடிய கொடிய நச்சுகள் உள்ளன. இவற்றைச் சமைத்தாலும் விஷத்தின் வீரியம் குறையாது என்பதால், அதைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே எம்மாவின் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு முந்தைய அந்த நேரலை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, “லைக்குகளுக்காக” உயிரைப் பணயம் வைக்கும் ஆபத்து குறித்துப் பெரிய எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

35 minutes ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

39 minutes ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

40 minutes ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

42 minutes ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

45 minutes ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

50 minutes ago