அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. CM விஜய்க்கு அரங்கேறிய அரசியல் சதி வேலை…!!

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் அவரது ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் ஓ.எஸ்.டி. (OSD) பதவியிலும், ஜான் ஆரோக்கிய சாமி அரசியல் ஆலோசகராகவும், தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி பொது நிகழ்வுகளின் ஆலோசகராகவும் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்கள் தவெக ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே நிலவும் உள்கட்சி அதிகாரப் போட்டியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. அரசு நிர்வாகத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பிய ஜான் ஆரோக்கிய சாமி, விஷ்ணு ரெட்டி மற்றும் அவர்களுக்குப் பின்னணியில் இருந்த ஆதவ் அர்ஜுனா ஆகிய மூவர் அடங்கிய கோஷ்டி, ஜோதிடரின் நியமனத்தால் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அஞ்சியது.

ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் நியமன உத்தரவு மட்டுமே முதலில் பொதுவெளியில் கசிந்த நிலையில், அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அந்த மூவர் கோஷ்டி திட்டமிட்டது. தங்களின் ஊடகத் தொடர்புகள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளுயன்சர்கள் மூலமாக “அரசு நிர்வாகத்தில் ஜோதிடரா? மூடநம்பிக்கையை அரசு ஊக்குவிக்கிறதா?” என்ற விவாதங்களை வேண்டுமென்றே கிளப்பிவிட்டனர். இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளால் சட்டமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டு கடும் கண்டனங்கள் எழுந்ததால், ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக முதலமைச்சர் விஜய் தனது ஜோதிடரின் நியமன உத்தரவை ரத்து செய்ய நேரிட்டது.

இந்த அதிரடி நகர்வுகள் கடந்த வாரம் தலைமைச் செயலக (கோட்டை) அதிகாரிகள் மத்தியில், குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மதிய உணவு இடைவேளையின் போது தீவிரமாக விவாதிக்கப்படும் முக்கியத் தலைப்பாக மாறியது. ஜோதிடரின் நியமன ரத்ததை எதிர்க்கட்சிகள் தங்களின் மக்கள் அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கொண்டாடி வரும் வேளையில், அதிகார வட்டாரங்களோ வேறு ஒரு உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. முதலமைச்சருக்கு ஜோதிடர் ரத்தன் பண்டிட் மீதான நம்பிக்கை இன்னும் குறையவில்லை என்றும், இந்த ரத்து முடிவு தற்காலிகமானது மட்டுமே என்றும் கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

8 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

9 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

9 மணத்தியாலங்கள் ago