“அடச்சீ.. கோவிலுக்கு வந்த இளம்பெண்ணிடம் போய் இப்படியா?”… போலி சாமியார் செய்தஅசிங்கம் … திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்…!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே வைத்தியம் பார்க்க வந்த இளம்பெண்ணை, போலி சாமியார் ஒருவர் ஆசை வார்த்தை கூறி இரண்டாவது திருமணம் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உமையப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் – கவிதா தம்பதியினரின் 19 வயது மகள் காயத்ரி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஆலோசனையின் பேரில், கல்லரப்பட்டி பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோவில் சாமியார் சுப்பிரமணியனிடம் சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு பில்லி சூனியம் இருப்பதாகக் கூறி நம்ப வைத்த சாமியார், பரிகாரம் செய்ய வேண்டும் எனக்கூறி சில நாட்கள் தங்கியிருக்கச் செய்துள்ளார்.

சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால், பெற்றோர் தங்கள் மகளை மீட்டு வேறு இடத்தில் மருத்துவம் பார்த்து குணப்படுத்தியுள்ளனர். தற்போது செவிலியர் படிப்பு படித்து வந்த காயத்ரி, கடந்த 22-ம் தேதி மருத்துவமனை பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் மர்மமான முறையில் காணாமல் போனார். பதற்றமடைந்த பெற்றோர் தேடிக்கொண்டிருந்த வேளையில், சாமியார் சுப்பிரமணியன் தொலைபேசியில் அழைத்து, “உங்கள் மகளை நான் திருமணம் செய்து கொண்டேன், நாங்கள் திருப்பதி செல்கிறோம்” என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஏற்கனவே திருமணமான சாமியாரின் இந்தச் செயல் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்தது.

இது குறித்து சாமியாரின் வீட்டிற்குச் சென்று கேட்டபோது, மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியானது. சாமியாரின் முதல் மனைவியே இந்தத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. தனது கணவர் காயத்ரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டால்தான் தங்கள் குடும்பம் உயிரோடு இருக்கும் என தனக்கு கனவு வந்ததாகவும், அதனால் தான் முன்னின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மகளை மீட்கச் சென்ற காயத்ரியின் பெற்றோரை, சாமியாரின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தாய் கவிதா, ஆலங்காயம் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்திச் சென்ற போலி சாமியார் சுப்பிரமணியனிடமிருந்து மகளை மீட்டுத் தர வேண்டும் என்றும், இதேபோல் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள போலி சாமியார் சுப்பிரமணியன் மற்றும் அவருக்கு உதவியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

3 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

10 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

17 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

19 minutes ago

பரபரப்பு..! “எங்களை ஏன் கேவலமா பேசினீங்க..? ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை… வேதனையில் நொறுங்கிப்போன வைகோ… பரபரப்பு குற்றசாட்டு..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…

25 minutes ago

“ராஜினாமா செய்யுங்கள் நான் பாத்துக்குறேன்” வாக்குறுதி கொடுத்த விஜய்…? செம மகிழ்ச்சியில் வைகோ…!!

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…

33 minutes ago