#image_title
9 ஆண்டுகளுக்கு முன்பு வரை விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டியிடும். இறுதியாக ஜில்லா-வீரம் ஆகிய படங்களுக்கு பிறகு அதாவது 2014-க்கு பிறகு கடந்த ஆண்டு தான் இவர்களது படங்கள் ஒரே நாளில் ரிலீசானது. அதற்கு முன்பு வரை இவர்களது படங்கள் ஏதாவது ஒரு பண்டிகையன்று வெளியாகி வசூல் ரீதியாக போட்டியிடும். அப்படி போட்டியிட்ட இரு படங்கள் பற்றியும், அப்படங்களின் வசூல் நிலவரங்கள் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
#image_title
15 வருடங்களுக்கு முன்பு அதாஅது 2007-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் போக்கிரி திரைப்படமும், அஜித் நடிப்பில் ஆழ்வார் திரைப்படமும் ஒன்றாக வெளியானது. 2007-ம் ஆண்டு பொங்கலை எந்த விஜய் ரசிகர்களும் மறக்க மாட்டார்கள். விஜய்யின் திரை வாழ்க்கையில் போக்கிரி திரைப்படம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதே சமயம் அஜித்தின் போதாத காலமாக அவரது ஆழ்வார் படம் படுதோல்வி அடைந்தது.
#image_title
தெலுங்கில் வெளியான போக்கிரி படத்தின் தமிழ் ரீமெக்கில் விஜய்யுடன் பிரபுதேவா இணைந்தார். அதே தலைப்பில், நகைச்சுவ, காதல், ஆக்ஷன் அகியவை கலந்த பிளாக் பஸ்டர் படமாக மாறியது போக்கிரி திரைப்படம். அந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக மாறிய போக்கிரி திரைப்படம் பல தியேட்டர்களில் 200 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்தது. தமிழ் திரைப்படங்களிலேயே 75 கோடி ரூபாய் வசூல் குவித்தது போக்கிரி திரைப்படம் தான். தமிழில் மட்டுமல்லாது, மலையாளத்திலும் போக்கிரி திரைப்படம் கொண்டாடப்பட்டது. கேரளாவில் அதிகளவு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படம் போக்கிரி என்ற சாதனையை படைத்தது.
#image_title
இதற்கு எதிர்மறையாக இயக்குநர் செல்வா இயக்கத்தில் அஜித், அசின், கீர்த்தி சாவ்லா, விவேக் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி படுதோல்வியை அடைந்தப் படம் ஆழ்வார். இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் அதள பாதாளத்திற்கு சென்றதால், பல தியேட்டர்களில் இருந்து குறிப்பிட்ட தினத்திற்குள்ளேயே இப்படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக போக்கிரி திரைப்படம் திரையிடப்பட்டது. இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதிக் கொண்ட விஜய் அஜித் படங்களில் ஆழ்வார் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
#image_title
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…