17 ஆண்டுகளை கடந்த ‘போக்கிரி’.. விஜயுடன் நேரடியாக மோதி படுதோல்வியடைந்த அஜித்தின் ‘ஆழ்வார்’ படத்தின் வசூல்..

By Archana on தை 12, 2024

Spread the love

9 ஆண்டுகளுக்கு முன்பு வரை விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டியிடும். இறுதியாக ஜில்லா-வீரம் ஆகிய படங்களுக்கு பிறகு அதாவது 2014-க்கு பிறகு கடந்த ஆண்டு தான் இவர்களது படங்கள் ஒரே நாளில் ரிலீசானது. அதற்கு முன்பு வரை இவர்களது படங்கள் ஏதாவது ஒரு பண்டிகையன்று வெளியாகி வசூல் ரீதியாக போட்டியிடும். அப்படி போட்டியிட்ட இரு படங்கள் பற்றியும், அப்படங்களின் வசூல் நிலவரங்கள் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

#image_title

15 வருடங்களுக்கு முன்பு அதாஅது 2007-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் போக்கிரி திரைப்படமும், அஜித் நடிப்பில் ஆழ்வார் திரைப்படமும் ஒன்றாக வெளியானது. 2007-ம் ஆண்டு பொங்கலை எந்த விஜய் ரசிகர்களும் மறக்க மாட்டார்கள். விஜய்யின் திரை வாழ்க்கையில் போக்கிரி திரைப்படம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதே சமயம் அஜித்தின் போதாத காலமாக அவரது ஆழ்வார் படம் படுதோல்வி அடைந்தது.

   
   

#image_title

 

தெலுங்கில் வெளியான போக்கிரி படத்தின் தமிழ் ரீமெக்கில் விஜய்யுடன் பிரபுதேவா இணைந்தார். அதே தலைப்பில், நகைச்சுவ, காதல், ஆக்‌ஷன் அகியவை கலந்த பிளாக் பஸ்டர் படமாக மாறியது போக்கிரி திரைப்படம். அந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக மாறிய போக்கிரி திரைப்படம் பல தியேட்டர்களில் 200 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்தது. தமிழ் திரைப்படங்களிலேயே 75 கோடி ரூபாய் வசூல் குவித்தது போக்கிரி திரைப்படம் தான். தமிழில் மட்டுமல்லாது, மலையாளத்திலும் போக்கிரி திரைப்படம் கொண்டாடப்பட்டது. கேரளாவில் அதிகளவு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படம் போக்கிரி என்ற சாதனையை படைத்தது.

#image_title

இதற்கு எதிர்மறையாக இயக்குநர் செல்வா இயக்கத்தில் அஜித், அசின், கீர்த்தி சாவ்லா, விவேக் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி படுதோல்வியை அடைந்தப் படம் ஆழ்வார். இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் அதள பாதாளத்திற்கு சென்றதால், பல தியேட்டர்களில் இருந்து குறிப்பிட்ட தினத்திற்குள்ளேயே இப்படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக போக்கிரி திரைப்படம் திரையிடப்பட்டது. இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதிக் கொண்ட விஜய் அஜித் படங்களில் ஆழ்வார் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

#image_title