Connect with us

“அப்டி நெனச்சிதான் நீ பேசுன.. இப்டி சொன்னா, உன் சாரி எனக்கு வேணாம்”.. நிக்சனுடன் மோதலுக்கு தயாரான வினுஷா..

TRENDING

“அப்டி நெனச்சிதான் நீ பேசுன.. இப்டி சொன்னா, உன் சாரி எனக்கு வேணாம்”.. நிக்சனுடன் மோதலுக்கு தயாரான வினுஷா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட  வாரம் நடைபெறுகிறது, இதில் பைனல் லிஸ்ட் செலெக்ஷணலில் 6 போட்டியாளர்கள் உள்ளார். தற்போது இந்த நிகழிச்சியில்  “பைனல் செலிப்ரேஷன்”  நடந்து கொண்டு இருக்கிறது, இதில் கலந்து கொள்ள வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ்  வீட்டிற்குள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

யாரும் எதிர்பாராத சமயத்தில் ஒவ்வொரு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் போட்டியாளர் வினிஷா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்குள் வந்ததுமே வினுஷா நிக்சனிடம்   சண்டைக்கு பாய்ந்தார். அதாவது நிக்சன் ஐஸ்வர்யாவிடம் தனியாக பேசும்போது  வினிஷாவின் நிறத்தையும் உடலையும் கேலி செய்திருந்தார்.

   

 

அந்த விஷயத்தை  காரணமாக வைத்து சில வாரங்களுக்கு முன்பு அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றது. இது குறித்து வினிஷா நிக்சனிடம் கேள்வி கேட்டபோது சாரி என்று அவர் கூறினார்.நிக்சன் சாரியை ஏற்க மறுத்தார் வினுஷா; எத்தனை முறை சாரி கேட்டாலும் நீ சொன்ன வார்த்தை மறையாது என கோபத்தில் கூறிவிட்டார். இது குறித்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top