தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஒரு கவிஞர் தான் வாலி. ஐந்து தலைமுறை நடிகர்களுக்கு தன்னுடைய பாடல்கள் மூலமாக ஹிட் கொடுத்து கடைசி வரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்டவர். எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி தற்போது முன்னணி நடிகர் சிம்பு வரை பல நடிகர்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். அதேபோல எம்எஸ்வி, கேவி மகாதேவன் தொடங்கி இன்றைய ஏ ஆர் ரகுமான் வரை பல இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் பணியாற்றியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதியவர். அவருக்காக ஏராளமான ஹிட் பாடல்கள் கொடுத்தும் உள்ளார். இன்று வரை அந்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதேபோல சிவாஜி தொடங்கி இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வரை பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த வாலி எம்.ஜி.ஆரை விடவும் சிவாஜிக்கு அதிக படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். அதே சமயம் எம்ஜிஆர் எழுதிய பல பாடல்கள் எம்ஜிஆர் உடைய அடையாளப் பாடல்களாக இன்றுமே உள்ளது. இப்படி எம்ஜிஆருக்கு பல பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்த நிலையில் எம்ஜிஆரின் அஸ்தான கவிஞராக மாறிய வாலி பல ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் எம்ஜிஆர், சிவாஜி பாடல்கள் குறித்து பேசிய அவர், நான் எம்ஜிஆர்க்கு பல ஹிட் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்த பாடல் இப்படி வரவேண்டும். இந்த வார்த்தைகளை போட்டு எழுதுங்கள் என்று எம்ஜிஆர் என்னிடம் சொன்னதே கிடையாது. மேலும் “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்ற பாடலை எம்.ஜி.ஆர் மட்டும் தான் பாட முடியும் சிவாஜி பாட முடியாது. ” யாரை நம்பி நான் பிறந்தேன்” பாடலை எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட எந்த நடிகர்கள் வேண்டுமானாலும் பாடலாம் ஆனால் “நான் ஆணையிட்டால்” என்ற பாடலை எம்.ஜி.ஆர் தவிர சிவாஜியால் பாட முடியாது” என்று கூறியுள்ளார்
அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மத் ஜாபர் உசேன், மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள…
சோனிபட் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஆறு வயது சிறுமி, அருகே உள்ள நீர் தொட்டியில் சடலமாக…
டி நகர் வாணி மகால் மேம்பாலம் அருகே ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியரான கார்த்திகேயன் என்பவரிடமிருந்து ரூ 11 லட்சம்…
ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு…
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…