MGR,சிவாஜி ரெண்டு பேரும் ஒரே மாதிரி கிடையாது…. கவிஞர் வாலி சொன்ன ரகசியம்..!!

By Soundarya on ஆனி 7, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஒரு கவிஞர் தான் வாலி. ஐந்து தலைமுறை நடிகர்களுக்கு தன்னுடைய  பாடல்கள் மூலமாக ஹிட் கொடுத்து கடைசி வரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்டவர். எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி தற்போது முன்னணி நடிகர் சிம்பு வரை பல நடிகர்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். அதேபோல எம்எஸ்வி, கேவி மகாதேவன் தொடங்கி இன்றைய ஏ ஆர் ரகுமான் வரை பல இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் பணியாற்றியிருக்கிறார்.

   

எம்.ஜி.ஆர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதியவர். அவருக்காக ஏராளமான ஹிட் பாடல்கள் கொடுத்தும் உள்ளார். இன்று வரை அந்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதேபோல சிவாஜி தொடங்கி இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வரை பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த வாலி எம்.ஜி.ஆரை விடவும் சிவாஜிக்கு அதிக படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.  அதே சமயம் எம்ஜிஆர் எழுதிய பல பாடல்கள் எம்ஜிஆர் உடைய அடையாளப் பாடல்களாக இன்றுமே உள்ளது. இப்படி எம்ஜிஆருக்கு பல பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்த நிலையில் எம்ஜிஆரின் அஸ்தான கவிஞராக மாறிய வாலி பல ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார்.

   

 

இந்நிலையில்  எம்ஜிஆர், சிவாஜி பாடல்கள் குறித்து பேசிய அவர், நான் எம்ஜிஆர்க்கு பல ஹிட் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்த பாடல் இப்படி வரவேண்டும். இந்த வார்த்தைகளை போட்டு எழுதுங்கள் என்று எம்ஜிஆர் என்னிடம் சொன்னதே கிடையாது. மேலும் “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்ற பாடலை எம்.ஜி.ஆர் மட்டும் தான் பாட முடியும் சிவாஜி பாட முடியாது. ” யாரை நம்பி நான் பிறந்தேன்” பாடலை எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட எந்த நடிகர்கள் வேண்டுமானாலும் பாடலாம் ஆனால் “நான் ஆணையிட்டால்” என்ற பாடலை எம்.ஜி.ஆர் தவிர சிவாஜியால் பாட முடியாது” என்று கூறியுள்ளார்