கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ராஜினாமா செய்துள்ளனர்.
பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த வழக்கில், KSCA நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தாமாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
