டேய்… வண்டிய நிப்பாட்டுடா… சினிமா பாணியில் வழிமறித்து… ரூ 11 லட்சம் துணிகரக் கொள்ளை… வழக்கறிஞர் உட்பட 3 பேர் சிக்கியது எப்படி?… சென்னையில் பரபரப்பு…!

Spread the love

டி நகர் வாணி மகால் மேம்பாலம் அருகே ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியரான கார்த்திகேயன் என்பவரிடமிருந்து ரூ 11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, வழக்கறிஞர் ஒருவர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பாரிமுனையில் உள்ள தனது மாமாவிடம் பெற்ற ரூ 12 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் திரும்பிச் சென்ற கார்த்திகேயனை, நான்கு பேர் கொண்ட கும்பல் மேம்பாலத்தில் வழிமறித்து மிரட்டி பணத்தைப் பறித்துத் தப்பியோடியது. இதில் அவர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த ரூ 1 லட்சம் மட்டுமே தப்பியது.

இச்சம்பவம் குறித்து பாண்டிபஜார் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வணிக நிறுவனங்களின் 30-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் யானைகவுனியைச் சேர்ந்த ஆனந்த் செல்வன், லிவிங்வார்ட் மற்றும் ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாப்லு ஆகிய மூவரையும் காவல்துறை விரைந்து கைது செய்தது. மேலும் தலைமறைவாக உள்ள நான்காவது நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆரம்பத்தில் கார்த்திகேயன் அளித்த முரண்பாடான தகவல்களால் அவர் மீதே சந்தேகம் அடைந்த போலீசார், அவரது வீட்டைச் சோதனையிட்ட பின் உண்மையைக் கண்டறிந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஹவாலா பணமா அல்லது கார்த்திகேயனின் உறவினர்கள் யாருக்காவது இதில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கார்த்திகேயன் பணம் கொண்டு வரும் தகவலை யாராவது திப்புக்கொடுத்து இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தினார்களா என்பது குறித்தும், அந்த பணத்தின் ஆதாரம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Swetha

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…! பாதுகாப்பு துறையில் 1,871 காலி பணியிடங்கள்… ரூ.1,00,000 வரை சம்பளம்…. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

பாதுகாப்புத் துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பணியாளர் தேர்வாணையம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி…

1 minute ago

“பாஜக பக்கம் சாஞ்சிட்டாரா விஜய்?”…. மோடிக்கு கொடுத்த ‘சர்டிபிகேட்…. அதிர்ச்சியில் ராகுல் காந்தி…. ஆட்டங்காணும் தமிழக அரசியல்…!

செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்தநாளாக அமைவது தமிழக அரசியலில்…

1 minute ago

அய்யய்யோ… 13 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்ட… பிரபல இன்ஃப்ளூயன்ஸருக்கு நேர்ந்த அதிர்ச்சி… விளம்பரப் படப்பிடிப்பில் செய்த துரோகம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

சோஷியல் மீடியா உலகில் 13 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு பிரபலமான ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் திஜாரா வைன்ஸ் , அண்மையில்…

4 minutes ago

“விஜய்யின் அரசியல் பிம்பத்தை உடைக்க மாஸ் பிளான்”…. திமுக இறக்கிய ‘ரகசிய’ ஃபார்முலா… இடைத்தேர்தலில் உதயநிதி போட்ட ‘ஸ்கெட்ச்’…..!

தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே…

7 minutes ago

“முதலமைச்சர் 3 நாள் வாய்தா வாங்கிட்டாரு”…. “சொரணை வந்துடுச்சா?”…. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.எஸ். பாரதி….!

சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…

13 minutes ago

அட கடவுளே… காதல் பெண்ணைக் கடத்த முயன்ற ராஜஸ்தான் இளைஞர்கள்… காரை நொறுக்கித் தர்ம அடி கொடுத்த மக்கள்… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூரு மகடி சாலையில் 22 வயது பெண் கடத்தப்படுவதாகச் சந்தேகமடைந்த தெருவிலிருந்த மக்கள் கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக்…

14 minutes ago