Categories: சினிமா

இரண்டாம் நாளே இந்த நிலைமையா..? கூட்டமின்றி காத்து வாங்கும் தியேட்டர்கள்… வசூலில் சரிவை சந்தித்த தக் லைஃப்..!!

Spread the love

நடிகர் கமலஹாசன் – மணிரத்தினம் கூட்டணியில் உருவான படம் தான் தக் லைப். இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார், இந்த படம் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மணிரத்தினத்தின் மெட்ராஸ்  டாக்கீஸ் நிறுவனமும், கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களின் எதிர்பார்ப்புக்கு உலை வைக்கும் விதமாக படத்தின் ரிசல்ட் அமைந்துள்ளது.

அதாவது முதல் நாளே படம் ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. மணி ரத்தினம் கமலஹாசன் கூட்டணியினர் ஏமாற்றி விட்டதாகவும் ரசிகர்கள் புலம்பினார்கள். அந்த அளவிற்கு படம் மோசமாக இருப்பதாகவும் கடுமையாக சாடினார்கள். மேலும் சமூக வலைதளங்களிலும் படத்தை ட்ரோல் செய்து ஏராளமான மீம்களும் போடப்பட்டு வருகிறது.  மேலும் படம் வசூலிலும் கடுமையான சரிவை  சந்தித்து வருகிறது. அதன்படி முதல் நாள் உலகளவில் 50 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வெறும் 36 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருந்தது.

அதிலும் இந்தியாவில் 17 கோடியும் வெளிநாட்டில் 19 கோடியும் வசூலித்தது. தற்போது இரண்டாவது நாளில் முதல் நாள் வசூல் பாதி கூட வரவில்லை. இந்திய அளவில் இரண்டாம் நாளில் வெறும் 7.5கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலை அள்ளி உள்ளது. மற்ற மாநிலங்களில் வசூல் மிகவும் கம்மியாக உள்ளது. மேலும் இரண்டாம் நாளில் பெரும்பாலான திரையரங்குகளில் படம் பார்க்க மக்கள் கூட்டம் இன்றி காத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் இந்த படம் 100 கோடி வசூல் எட்டுவதை கேள்விக்குறியாகிவிடும். மேலும் இன்றும் மற்றும் நாளை விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago