நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதே சமயம் தகுதி உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே அரசின் நிதி உதவி சென்றடைய வேண்டும் என்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வரும் நிலையில் பல விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 21- வது தவணைக்கான தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீங்கள் செய்யும் சிறு தவறும் உங்களுக்கு பணம் கிடைக்காமல் செய்துவிடலாம். ஆகவே வங்கி கணக்குடன் ஆதார இணைப்பதுடன் கட்டாயம் e-Kyc செய்திருக்க வேண்டும்.
தவறான IFSC Code, நில உரிமையில் குளறுபடி இருந்தால் பணம் கிடைக்காது. எனவே பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் தீபாவளி பரிசாக பி எம் கிஷான் தவணைத்தொகை 2000 ரூபாயை அடுத்த மாதமே வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் 2019 பிப்ரவரி 1ஆம் தேதிக்கு பிறகு நிலம் வாங்கிய விவசாயிகள் மற்றும் ஒரே குடும்பத்தில் பல பயனாளிகள் இருந்தால் வெரிஃபிகேஷன் முடியும் வரை அவர்களுக்கு பணம் கிடைக்காது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…