திடீர் பரபரப்பு… விஜயின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்குகிறார். இதற்காக விஜய் திருச்சிக்கு வருகை தந்துள்ள நிலையில் மக்களின் கூட்ட நெரிசலுக்கு நடுவே மரக்கடை பகுதியை நோக்கி விஜயின் தேர்தல் பிரச்சார வாகனம் நகர்ந்து கொண்டிருக்கிறது. திருச்சியை முடித்துவிட்டு அரியலூர் மற்றும் பெரம்பலூரில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் அடுத்த வாரம் சனிக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அவுரி திடலில் பிரச்சாரம் செய்ய கட்சியினர் திட்டமிட்டுள்ள நிலையில் ஏற்கனவே திமுக கூட்டம் நடத்த முன்பதிவு செய்துள்ளதால் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இன்று திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்யும் நிலையில் காலை முதலே பல கிலோமீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Nanthini

Recent Posts

“அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லத்தான்…” இது புது கணக்கு.. முதல்வர் விஜயின் லண்டன் பயணம் …. திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…

20 minutes ago

“என்னை விட்டுரு…” மாற்றுத்திறனாளி பெண்ணின் அலறல் சத்தம்… வேலைக்கு சென்ற இடத்தில் தர்ம அடி வாங்கிய தொழிலாளி….. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…

28 minutes ago

“கடவுளே இது என்ன கொடுமை…! கணவர் இறந்த துக்கத்தில் 7 மாத கர்ப்பிணி தற்கொலை… பரிதவிக்கும் 4 வயது குழந்தை… 8 ஆண்டு கால வாழ்க்கையில் பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…

47 minutes ago

“டேட்டிங் செயலியில் வலை….”  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்த கும்பல்…. வாலிபரை கத்தியால் குத்தி கொடூரம்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…

60 minutes ago

“அக்கா வீட்டிற்கு சென்ற மனைவி….” தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொடூரம்…. கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை… பகீர் சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…

1 மணத்தியாலம் ago

“4 பெற்ற பிள்ளைகளும் செய்த துரோகம்…” 75 வயது கணவரிடம் விவாகரத்து கேட்டு போலீசை நாடிய மூதாட்டி…! அம்மா, அப்பாவை பிரித்து சோதனை…. பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…

2 மணத்தியாலங்கள் ago