சைக்கோத்தனத்தின் உச்சம்… கணவனை துண்டு துண்டாக வெட்டி.. அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த மனைவி… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி….!

Spread the love

சென்னையை உலுக்கிய பெரம்பூர் ரயில் நிலைய சூட்கேஸ் கொலை வழக்கின் பின்னணியில், கள்ளக்காதல் விவகாரமும் கணவனின் கொடூரக் கொலையும் அம்பலமாகியுள்ளது. கடந்த 5-ஆம் தேதி பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த நீல நிற சூட்கேசில், தலை மற்றும் கை, கால்கள் இல்லாத நிலையில் ஒரு ஆணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தின் உடலில் இருந்த ஷார்ட்ஸ் துணியின் பார்கோடை (Barcode) வைத்தும், அதன் மூலம் கிடைத்த செல்போன் லொகேஷனை பின்தொடர்ந்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இறுதியில், தேனாம்பேட்டையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு வீடு பிடித்துக் கொடுக்கும் உதவியாளராகச் செயல்பட்டு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோகிமா (36) என்பவரை போலீசார் தந்திரமாக வாட்ஸ்அப் கால் மூலம் வரவழைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ரோகிமாவின் இரண்டாவது கணவரான அமீர் அலி என்பது உறுதியானது. சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த அமீர் அலிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததால், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவரின் சித்திரவதை தாங்க முடியாமல் தவித்த ரோகிமாவுக்கு, தி.நகரில் காய்கறி கடை நடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அஷ்ரப் அழைக்க, கணவனை உயிருடன் விட்டால் தங்களைக் கொன்றுவிடுவான் என அஞ்சிய ரோகிமா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி கடந்த 3-ஆம் தேதி இரவு, அமீர் அலிக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து படுக்க வைத்துள்ளனர். அவர் மயங்கிய பிறகு, அரிவாள்மனையால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்ததோடு, சடலத்தின் தலை, கை, கால்களைத் தனித்தனியாக வெட்டித் துண்டித்துள்ளனர். பின்னர் துர்நாற்றம் வீசாமல் இருக்க வாசனை திரவியங்களைத் தெளித்து, உடற்பகுதியை மட்டும் சூட்கேசில் அடைத்து ரேபிடோ ஆட்டோ மூலம் பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீசியுள்ளனர். கை, கால்களைக் கால்வாயில் வீசிய கள்ளக்காதலர்கள், வெட்டப்பட்ட தலையைச் செங்கல்பட்டு பகுதியில் புதைத்துள்ளனர். போலீசாரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து ரோகிமாவின் கள்ளக்காதலன் அஷ்ரப்பும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையில் வெளிவந்த மிக அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், கணவரின் உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டும் கொடூரக் காட்சிகளை ரோகிமா தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, கணவரின் பிணத்தின் அருகே நின்று சிரித்தபடி விதவிதமாக செல்பி புகைப்படங்களையும் எடுத்து, அந்த வீடியோக்களையும் படங்களையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடிக்கடி பார்த்து ரசித்துக் கொண்டாடியுள்ளார். மேலும், கொலையை மறைப்பதற்காக அமீர் அலியின் முகநூல் பக்கத்தில் நுழைந்து, “எனக்கு வாழப் பிடிக்கவில்லை, என்னை யாரும் தேட வேண்டாம்” என்று இந்தியில் பதிவிட்டு நாடகமாடியதும் போலீசாரின் விசாரணையில் முழுமையாக அம்பலமாகியுள்ளது. தற்போது இந்த வழக்கு ஓட்டேரி போலீசாருக்கு மாற்றப்பட்டு, கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago