#image_title
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக ஊழியர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC தேர்வு மூலம் திறமையான ஊழியர்களை அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றனர். மொத்தம் எட்டு வகையான குரூப் தேர்வுகள் இருக்கின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தேர்வில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர். அதில் ஒரு சிலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஒவ்வொரு வருடமும் தேர்வுகளில் ஒரு சில மாற்றங்கள் நடக்கும். அது போல ஏற்கனவே குரூப் 2 குரூப் 4 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த TNPSC நிர்வாகம் தற்போது அடுத்த மாற்றத்தை குரூப் 1 தேர்வில் அறிவித்திருக்கிறது. குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான பாடத்திட்டத்தை TNPSC மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய பாதத்திட்டம் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு பொது அறிவு பிரிவில் ஆறு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே இருந்த பாடத்திட்டத்தில் ஒன்பது படங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று படங்கள் குறைக்கப்பட்டு ஆறு பாடல்களில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம் பெறுவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய பொருளாதாரம் தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் குறித்த பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும் எனவும் இந்திய ஆட்சியியல் பாடத்திலிருந்து 40 கேள்விகளும் தமிழ்நாட்டின் வரலாறு பண்பாடு அரசியல் இயக்கங்கள் பாடத்திலிருந்து 40 கேள்விகளும் கேட்கப்படும் என்று TNPSC நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் பொது அறிவு பிரிவில் மொத்தம் 175 கேள்விகள் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக திறனறிவு மற்றும் மனக்கணக்கு முன்னறிவிப்பு பிரிவிலிருந்து மொத்தம் 27 கேள்விகள் கேட்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. வருடாந்திர அட்டவணையின் படி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வருகிற ஏப்ரல் மாதம் வெளிவரும். முதல் நிலை தேர்வு ஜூன் மாதத்தில் நடந்த TNPSC திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
'பொன்னியின் செல்வன்', 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துப் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், வழக்கு ஒன்றில் தொடர்புடைய கணவரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போலிஸ் படையினர், அங்கே…
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர்…
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…
வழக்கமாக விநாயகப் பெருமானுக்கு லட்டு மற்றும் மோதகம் படைக்கப்படும் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பக்தர்கள் "போபா டீ"…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…