பாக்கவே கஷ்ட்டமா இருக்கு.. வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்… ஹெலிகாப்டரில் வந்த உணவுப் பொட்டலங்கள்.. கண்கலங்க வைக்கும் காணொளி..

By Begam

Published on:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

   

மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை. வெள்ளம் முழுமையாக வடியாததால் பல பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. சென்னையின் பல இடங்களில் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்தவகையில் ‘Indian Air Force’ தற்பொழுது ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் தவிப்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கும் வீடியோவானது இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

author avatar