இந்த புகைப்படத்தில் பிரபுவுடன் இருக்கும் பிரபல சீரியல் நடிகை யாருன்னு தெரியுதா..? விஜய் டிவியின் ஹிட் சீரியல்ல இப்ப நடிக்கிறாங்க…

By Begam on சித்திரை 30, 2024

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும் மீனாவிற்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். ஒவ்வொரு நாளும் புது புது கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி யிலும் தொடர்ந்து முன்னணி இடத்தை பிடித்து வருகிறது.

   

கடந்த வாரத்தில்  மனோஜிடமிருந்து பணத்தை பறித்து சென்ற ஜீவாவை ரோகிணியும் , மனோஜும் தேடி கொண்டிருந்தனர். ஜீவா அவர்களிடம் வசமாக சிக்க அவரிடமிருந்து தற்போழுது 30 லட்சம் பணத்தை வாங்கியுள்ளனர். இதனை வீட்டிற்கு தெரியாமல் மறைத்து புது பிசினஸ் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

   

 

சீரியல் ஆரம்பித்திலிருந்தே fraud வேலை அதிகமாக செய்யும் ரோஹிணிக்கு ஆதரவாக இயக்குனர் கதையை கொண்டு செல்வது ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முத்துவிற்கு ரோகிணியின் மேலே எப்பொழுதும் சந்தேகம்  இருந்து கொண்டே தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் முத்துவாவது ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா என்பதை.

இந்த சீரியலில் விஜயாவின் தோழியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடுத்திருப்பவர் பாக்யா ஸ்ரீ. தமிழில் ‘தேவியின் திருவிளையாடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பலமொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.   தற்பொழுது இவர் தனது இளமை பருவத்தில் நடிகர் பிரபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.