சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குத்துப்பாடலுக்கு ஆடுவதற்கு என்றே நடிகைகள் பலர் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என பல நடிகைகள் கவர்ச்சி பாடலுக்கு ஆடி வந்தனர். ஹீரோயின்களே கவர்ச்சியாக நடிக்க களமிறங்கியதை அடுத்து ஐட்டம் பாடல்களுக்கு ஆடுபவர்கள் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
சிம்ரன், கவுதமி, ரோஜா, மீனா தொடங்கிய குத்தாட்டம், குஷ்பு, சமந்தா, தமன்னா, நயன்தாரா, அஞ்சலி, ஸ்ருதிஹாசன் வரை தற்பொழுது சென்றுள்ளது. ஒரு படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தை ஒரே ஒரு குத்தாட்டம் போட்டு சம்பாதித்து விடுகிறார்கள் ஒரு சில நடிகைகள்.
‘புஷ்பா’ படத்தில் நடிகை சமந்தா, ‘ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார். அதேபோல ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். இந்த கலாச்சாரத்தை முதன்முதலில் தொடங்கிய நடிகை யார் தெரியுமா..?
அவர் வேறு யாருமில்லை நடிகை சிம்ரன் தான். நடிகர் விஜய் நடித்த யூத் படத்தில் ‘அட ஆள்தோட்ட பூபதி நானடா’ என்ற பாடலுக்கு முதன்முதலாக நடிகை ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடினார். இதைத்தொடர்ந்து தான் தற்பொழுது முன்னணி நடிகைகள் பலரும் இவ்வாறு நடனமாடி வருவது குறிப்பிடத்தக்கது.