வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான இவர், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் விஜய் ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மாளவிகா ஒரு ஹிந்தி படங்களிலும் மற்றும் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் தங்கலான் என்கிற பிரம்மாண்ட திரைப்படம் தயாராகி உள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்துள்ளார் மாளவிகா.
I’ll go the day you become relevant in some form and then ask me the same question https://t.co/LYqxYXBaOj
— Malavika Mohanan (@MalavikaM_) April 29, 2024
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமுகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மாளவிகா மோஹனன். இவர் தற்பொழுது தனது ரசிகர்களுடன் இணைந்திருக்க, தனது எக்ஸ் பக்கத்தில் #AskMalavika என்ற தலைப்பில் அவர்களோடு உரையாடினார். அப்பொழுது ரசிகர் ஒருவர் “எப்பொழுது நீங்கள் கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டு, நடிக்க போகிறீர்கள்” என்று சர்ச்சையான கேள்வி ஒன்றை கேட்டார்.
Never. Got a problem with that? https://t.co/1Y111hw7pK
— Malavika Mohanan (@MalavikaM_) April 29, 2024
அதற்கு “நான் நிறுத்த மாட்டேன், அதில் உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் இருக்கிறதா? என்று மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல மற்றொரு நெட்டிசன் ‘அக்கா எப்போ ஆக்டிங் கிளாஸ் போக போறீங்க?’ என்று கிண்டலாக கேள்வி கேட்க, ‘நீங்களும் ஏதோ ஒரு வகையில் எனக்கு பொருத்தமான நபராக மாறி, இந்த கேள்வியை கேட்கும் பொழுது நான் நடிப்பு பள்ளிக்கு செல்வேன்’ என்று பதில் அளித்துள்ளார். இந்த பதிவுகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.