நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை பார்த்திருக்கீங்களா..? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

By admin on வைகாசி 17, 2024

Spread the love

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓய். ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு படத்தில் முதன் முதலாக நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் நடித்த அம்மன், படையப்பா, நாகேஸ்வரி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

News18 Tamil

   

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடித்த படையப்பா திரைப்படம் மாபெரும் அளவில் ஹிட்டானது. அவரது தனித்துவமான நடிப்பிற்காக ரம்யா கிருஷ்ணன் பிரபலமானார்.

   

 

இதனையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ஜோடியாக ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

பெரிய திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் ரம்யா கிருஷ்ணன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம், ராஜகுமாரி, வம்சம் ஆகிய சீரியல்கள் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் தனது தாயுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

News18 Tamil