என்னது..! அஜித்துக்கு இப்படி ஒரு செண்டிமெண்டா..? 20 லட்சமாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவர் செய்யும் வேலை..!

By Mahalakshmi on வைகாசி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இன்னும் கூற வேண்டும் என்றால் சினிமாவில் நடிக்க தொடங்குவதற்கு முன்னதாக பைக் ரேஸ்ராக வேண்டும் என்பதுதான் அவரின் மிகப்பெரிய கனவாக இருந்தது. பைக் மீது அதீத காதல் கொண்ட அஜித் தற்போது வரை பைக் ரேஸ் சென்று கொண்டிருக்கின்றார்.

   

பைக்கை பற்றி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது அவருக்கு அத்துபடி தான். அவரே பைக் ரிப்பேர், டயர் மாற்றுவது என அனைத்தையும் செய்து விடுவார். சிறுவயதில் படிப்பு ஏறாததால் பைக் மெக்கானிக் கடையில் நேரம் செலவழித்து வந்த அஜித் பைக் ரேசர் ஆகி பல போட்டிகளில் கலந்து கொண்டு பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

   

ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருந்த காரணத்தினால் பலரும் அவரை சினிமாவில் நடிப்பதற்கு பரிந்துரைத்தார்கள். அப்படி அவர் ஒப்பந்தமான திரைப்படம் தான் அமராவதி. முதல் படத்திலேயே 40,000 சம்பளம் கேட்டார். அதுவும் தனக்கு பிடித்த பைக் வாங்க வேண்டும் என்பதற்காக பல திரைப்படங்களில் நடித்து புதுப்புது பைக்குகளை வாங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும்.

 

முதுகில் பல அடிகள் பட்டு சர்ஜரி செய்திருப்பதால் பைக் ரேஸுக்கு செல்லாமல் இருந்து வருகிறார். இவரிடம் மட்டும் பல லட்சம் மதிப்புள்ள பைக்களை சொந்தமாக வைத்து இருக்கின்றார். ஒவ்வொரு முறையும் பல நாடுகளுக்கு தனது பைக் மூலமாக சென்று வருகிறார். அப்படி இவர் பயணம் செய்யும்போது இவருக்கு பின்னாடி மூன்று பைக்குகள் ஏற்றப்பட்ட வண்டி ஒன்று சென்று கொண்டிருக்குமாம்.

தேவைப்பட்டால் அதிலிருந்து ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு செல்வார். வண்டி பழுதடைந்தால் அவரே சரி செய்து விடுவாராம். ஆனால் அவர் ஒரு செண்டிமெண்ட் பார்ப்பாராம். அதாவது பஞ்சர் ஆகிவிட்டால் அல்லது டயர் வெடித்து விட்டால் அஜித்துக்கு பிடிக்காதாம். அது எத்தனை லட்சம் பைக்காக இருந்தாலும் அதை அங்கேயே விட்டுவிட்டு வேறு பைக்கை எடுத்துக்கொண்டு சென்று விடுவார்.

அப்படி ஒரு முறை பைக்கை விட்டுவிட்டு செல்லும்போது அவர் கூட இருந்தவர்கள் இந்த வாகனம் பல லட்சம் ரூபாய் இருக்கும் இதை அப்படியே விட்டுவிட்டு செல்ல வேண்டாம். நாங்கள் வேணுமென்றால் எடுத்துக் கொள்கிறோம் என்று கூற என்னமோ செய்யுங்கள். ஆனால் இது எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விடுவாராம் நடிகர் அஜித். இப்படி பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளையும் செண்டிமண்டை கருத்தில் கொண்டு அங்கேயே விட்டு செல்வது அவரது பழக்கம் என வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்து இருக்கின்றார்.