இடியாப்ப சிக்கலை விட இது அதிகமா இருக்கே..! AAA படத்தின் மூலமாக சிம்புவுக்கு வந்த புதிய பிரச்சனை.. எம்புட்டு..!

By Mahalakshmi on வைகாசி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான். நடிகராக மட்டுமில்லாமல் இயக்கம், பாடல் ஆசிரியர், பாடகர், டான்ஸ் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்த இவர் 2015 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்திற்கு லேட்டாக வருகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.

   

அப்போது இருந்தே அவருக்கு சோதனை காலம் தொடங்கியது என்று கூறலாம். ஆனால் அவரை ரேட் கார்டு போடும் அளவுக்கு கொண்டு சென்ற திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம். 2017 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் நடிகை தமன்னா, ஸ்ரேயா சரண், மகத் வீட்டில் பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

   

 

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த இப்படம் சிம்புவின் கேரியரில் மிகவும் மோசமான திரைப்படம் என்ற பெயரை பெற்றது. சிம்புவின் ரசிகர்களை மிகவும் சோதித்த திரைப்படம் என்றால் இதுதான். முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்ற போதே இப்படத்தின் ரிசல்ட் முடிவாகிவிட்டது. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதாக பல திரையரங்கு ஓனர்கள் நினைத்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகப் போகின்றது என்று கூறப்பட்டு வந்த நிலையில் முதல் பாகமே படுதோல்வியை சந்தித்ததால் அடுத்த பாகம் எடுக்கவே இல்லை. இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். இந்த திரைப்படத்தின் கதையை சிம்பு தான் இஷ்டத்துக்கு மாற்றியதால் இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இன்றுவரையிலும் பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு படம் கொடுக்க வேண்டிய பஞ்சாயத்து தற்போது வரை நீடித்து வருகின்றது. இதற்கு ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது முடிவாக சிம்பு இரண்டரை கோடி ரூபாயை நான் கொடுத்து விடுகிறேன்.

அதோடு என்னை விட்டுவிட சொல்லுங்கள் என்று தெரிவித்திருக்கின்றார். ஆனால் மைக்கேல் ராயப்பன் இந்த இரண்டரை கோடியை கொடுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன், ஆனால் உங்களின் படம் ரிலீஸ் ஆகும்போது நான் பிரச்சனை செய்வேன் என்று கூறியிருக்கிறார். நீங்கள் கொடுக்கவில்லை என்றாலும் உங்கள் படத்தின் தயாரிப்பாளர்கள் நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம்.

அதாவது ஒரு திரைப்படத்தில் பாதி சம்பளம் கொடுத்து மட்டுமே ஒரு நடிகரை கமிட் செய்யும் நிலையில், படம் முடிந்த பிறகு மீதி சம்பளம் கொடுப்பார்கள். அந்த மீதி சம்பளத்தை தனக்கு கொடுக்கட்டும் என்று வாக்குவாதம் செய்து வருகிறாராம் மைக்கேல் ராயப்பன். இதனை வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கின்றார்.