“நாங்க ஓட்டு போட மாட்டோம்” யாரும் ஓட்டு கேட்க வராதீங்க… தேர்தலைப் புறக்கணிப்பதாக அரியலூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்… பெரும் பரபரப்பு..!!

Spread the love

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் எடுத்துள்ள முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊராட்சியின் 5 மற்றும் 6-வது வார்டு பகுதிகளில் சாலை வசதி, சீரான குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் வடிகால் போன்ற அத்தியாவசிய தேவைகள் கடந்த 5 ஆண்டுகளாகப் பூர்த்தி செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாகத் தங்கள் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். “அடிப்படை வசதிகள் இல்லை என்றால் வாக்குகள் இல்லை” என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருப்பதால், தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்திப் பொதுமக்களைச் சமாதானப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

5 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

6 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

7 மணத்தியாலங்கள் ago