Categories: சினிமா

வைரமுத்து எழுதுன பாட்டுப் பிடிக்காமல் பாடல் ஆசிரியரை மாற்றிய இயக்குனர் விக்ரமன்… ஏ ஆர் ரஹ்மானின் ரியாக்‌ஷன் இதுதானாம்!

Spread the love

1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

அவர் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான திரைப்படம் புதிய மன்னர்கள். அந்த படத்தில் மாணவர்கள் அரசியலைப் பேசியிருந்தார். நல்ல எதிர்பார்ப்பிருந்தும் அந்த படம் வெளியான போது படுதோல்வி அடைந்தது. ஆனாலும் இன்றளவும் அந்த படத்தின் பாடல்கள் பெரியளவில் கொண்டாடப்படுகின்றன.

விக்ரமனோடு, ஏ ஆர் ரஹ்மான் இணைந்து பணியாற்றிய ஒரே படம் இதுதான். இந்த படத்தில் ஒரு பாடலை தன்னுடைய ஆஸ்தான் பாடல் ஆசிரியரான வைரமுத்துவை எழுத வைத்துள்ளார் ரஹ்மான். ஆனால் அந்த பாடல் வரிகள் இயக்குனர் விக்ரமனுக்குப் பிடிக்கவேயில்லையாம்.

இதனால் அவர் ரஹ்மானிடம் “நான் ஒரு பாடல் ஆசிரியரை அனுப்புகிறேன். அவர் பாடல் எழுதட்டும். உங்களுக்குப் பிடித்தால் அதைப் பயன்படுத்தலாம் என்று சொல்லியுள்ளார். அப்படி வந்தவர்தான் பழனிபாரதி. அவர் எழுதிய பாடல்தான் ‘நீ கட்டும் சேல மடிப்புலதான் கசங்கிப் போனேண்டி’ பாடல். அந்த வரிகள் ரஹ்மானுக்குப் பிடிக்கவே, அதையே பயன்படுத்தியுள்ளார்.

இந்த தகவலை புதிய மன்னர்கள் படத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்த பாவா லட்சுமணன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

5 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago