Categories: சினிமா

காரைக்குடியை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிய விசு… சிதம்பர ரகசியம் படத்தால் தமிழ் சினிமாவில் நடந்த மாற்றம்!

Spread the love

தமிழ் சினிமாவில் கதாசிரியராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர் விசு. இவர் இயக்கி நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. நாடகத்துறையில் இருக்கும்போது விசு ‘உறவுக்கு கைகொடுப்போம்’ என்ற நாடகத்துக்குக் கதை எழுதினார்.

அதன் பின்னர் பல நாடகங்கள் எழுதி இயக்கி, சினிமாவில் பாலச்சந்தரின் உதவி இயக்குனராக சேர்ந்து அவர் படங்களுக்கு கதை வசனம் எழுதி பின்னர் தானே இயக்குனராகவும் நடிகராகவும் உயர்ந்தவர். அவர் முதன் முதலில் இயக்கிய மணல் கயிறு மற்றும் சிதம்பர ரகசியம் போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட்ஸ்களாக அமைந்தன.

அவரை புகழின் உச்சத்துக்கு அழைத்துச் சென்ற படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுத்து சூப்பர்ஹிட் ஆன அந்த படம் வசூலை வாரிக் குவித்ததோடு தேசிய விருதையும் பெற்றது. வெறும் 15 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் விசுவுடன் ரகுவரன், லட்சுமி, கமலா காமேஷ், மனோரமா, சந்திரசேகர், காஜா ஷெரீப், டெல்லிகணேஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

இந்த படத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் விசு சிதம்பர ரகசியம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்திருந்தார். நகைச்சுவைத் திரில்லர் படமாக எடுக்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று அந்த படத்தின் லோகேஷன்கள்தான். யாருமே அதுவரை அதிகமாக செல்லாத காரைகுடி பகுதிகளுக்கு சென்றுள்ள அங்குள்ள நகரத்தார் மாளிகைகளில் ஷூட்டிங்கை நடத்தினார் விசு.

இந்த லொக்கேஷன்கள் கவனத்தை ஈர்க்கவே அதன் பிறகு தமிழ் சினிமாவினர் அடிக்கடி தங்கள் படங்களின் பாடல்கள் மற்றும் காட்சிகளை எடுக்க காரைக்குடிக்கு செல்ல ஆரம்பித்தனர். இப்படி காரைக்குடியை ஒரு பிரபலமான ஷூட்டிங் லொக்கேஷன் ஆக்கியதில் விசுவுக்கு முக்கியப் பங்குண்டு.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

6 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

7 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

7 மணத்தியாலங்கள் ago