Categories: சினிமா

முத்தத்தில் என்ன வெரைட்டி வேணும்..? மாரி செல்வராஜ் படத்திற்கு டப்பிங் பேசிய மலையாள பைங்கிளி..!!

Spread the love

பிரபல நடிகையான நிகிலா விமல் கடந்த 2009-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான பாக்யதேவதா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கிடாரி, நான் பிரகாசன், பூசாரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக நிகிலா விமல் நடிப்பில் ரிலீசான போர் தொழில், குருவாயூர் அம்பலநடையில் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படத்திலும் நிகிலா விமல் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற 23-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளதால் ப்ரொமோஷன் பணிகளில் நிகிலா விமல் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் நிகிலா விமல் பல தகவல்களை கூறியுள்ளார். குருவாயூர் அம்பலநடையில் படத்தின் முதல் பிரவியூசோ பார்த்துவிட்டு நிகிலா விமலுக்கு அது சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.

 

அதனை சொன்னபோது படக்குழுவினர் அவரை பூமர் என கலாய்த்து உள்ளனர். இப்போது இருக்கும் ஜெனரேஷனுக்கு அந்த படம் பிடிக்கும் என இயக்குனர் விபின் தாஸ் கூறியுள்ளார். மேலும் அழகிய லைலா பாடல் அந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என நிகிலா விமல் எதிர்பார்க்கவே இல்லை என கூறியுள்ளார். இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் ரிலீசான கர்ணன் திரைப்படம் மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. அந்த படத்தில் ரதிஷா விஜயனுக்கு நிகிலா விமல் தான் டப்பிங் பேசியுள்ளார்.

தட்டான் தட்டான் பாடலில் தனுஷ் ரதிஷா விஜயனுக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் இருக்கும். அதற்கு டப்பிங் செய்யும்போது வெரைட்டியா முத்தம் கொடுங்க என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். அது எப்படி வெரைட்டியா முத்தம் கொடுக்க முடியும் என நிகிலா விமல் கேட்டுள்ளார். அதன் பிறகு கையில் ஒவ்வொரு இடத்திலும் வைத்து முத்தம் கொடுத்த சத்தங்களை டப்பிங் செய்துள்ளனர். கேரளாவை சேர்ந்த நிகிலா விமல் சரளமாக தமிழ் பேசக்கூடியவர். தனது படங்களுக்கும் அவர்தான் டப்பிங் பேசிய வருகிறார். நிக்லா விமல் நடித்த வாழை திரைப்படம் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

BREAKING: தவெக நிர்வாகிகள் 6 பேர் அதிரடி கைது… அதிர்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியை முன்னிட்டு ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின்…

6 minutes ago

“வெறும் ஒரு டிகிரி போதும்!… RBI-யில் கைநிறைய சம்பளத்தில் ‘ஆபீசர்’ வேலை… மே 20 கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

வங்கிகளின் வங்கி என்று போற்றப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI), அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான…

12 minutes ago

பெரும் பரபரப்பு..! வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக MLA… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

சென்னை ராயபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ விஜய் தாமு தனது பிறந்தநாளை முன்னிட்டு வாளால் கேக் வெட்டிய…

13 minutes ago

“நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்..?” பாஜகவை விட தேர்தல் ஆணையமே பெரிய எதிரி.. தோல்விக்கு பின் கொந்தளித்த மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய…

19 minutes ago

“இனி வயதான காலத்தில் கவலை வேண்டாம்!… மாதம் ரூ.5000 பென்சன் உறுதி… மத்திய அரசின் சூப்பர் ஹிட் ஸ்கீம்… கணவன் – மனைவி இருவருக்கும் பென்சன் தரும் அதிரடி திட்டம்”…!!!!

மத்திய அரசின் அடல் பென்சன் திட்டம் (APY) தற்போது இந்தியாவில் மிக முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக உருவெடுத்துள்ளது. 2015…

22 minutes ago