“இனி வயதான காலத்தில் கவலை வேண்டாம்!… மாதம் ரூ.5000 பென்சன் உறுதி… மத்திய அரசின் சூப்பர் ஹிட் ஸ்கீம்… கணவன் – மனைவி இருவருக்கும் பென்சன் தரும் அதிரடி திட்டம்”…!!!!

Spread the love

மத்திய அரசின் அடல் பென்சன் திட்டம் (APY) தற்போது இந்தியாவில் மிக முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக உருவெடுத்துள்ளது. 2015 மே 9 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், இதுவரை 9 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. குறிப்பாக 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 1.35 கோடி புதிய உறுப்பினர்கள் இதில் இணைந்துள்ளனர். இது இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு நிதியாண்டில் எட்டப்பட்ட மிக உயர்ந்த சேர்க்கை அளவாகும்.

அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இத்திட்டம் விளங்குகிறது. இதன் சிறப்பம்சமே அரசு உத்தரவாதம் அளிக்கும் ஓய்வூதியம் தான். இத்திட்டத்தில் சேரும் நபர்கள் 60 வயதை அடைந்த பிறகு, அவர்கள் செய்த முதலீட்டிற்கு ஏற்ப மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை நிலையான ஓய்வூதியத்தைப் பெற முடியும். இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) சிறப்பாக நிர்வகித்து வருகிறது.

இத்திட்டத்தில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் குடும்பப் பாதுகாப்பு ஆகும். ஒருவேளை பயனாளி இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு அதே ஓய்வூதியத் தொகை தொடர்ந்து வழங்கப்படும். கணவன், மனைவி இருவருமே இறந்துவிடும் சூழலில், பயனாளி 60 வயது வரை சேமித்த முழுத் தொகையும் அவர்களால் நியமிக்கப்பட்ட வாரிசுதாரருக்கு (Nominee) திரும்பத் தரப்படும். இதனால் முதலீடு செய்யும் பணம் எங்கும் வீணாகாமல் குடும்பத்திற்கே சென்றடைகிறது.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களும் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியானவர்கள். குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தில், வருமான வரி செலுத்துபவர்கள் சேர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த முதலீட்டில் முதுமைக் காலத்தில் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய விரும்புவோருக்கு, இந்த அடல் பென்சன் திட்டம் ஒரு சிறந்த தன்னார்வ சேமிப்புத் திட்டமாகத் திகழ்கிறது.

Muthu Mani

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

5 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

6 மணத்தியாலங்கள் ago