“இப்படி முதுகுல குத்திட்டீங்களே” அன்னைக்கு ஸ்டாலின் செஞ்சது மறந்து போச்சா..? காங்கிரஸை கடுமையாக சாடிய திமுக…!!

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ள நிலையில், திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக-வுக்கு ஆதரவு தருவது காங்கிரஸின் தனிப்பட்ட முடிவு என்றும், அதற்கு திமுகவின் அனுமதி தேவையில்லை என்றும் கூறியுள்ள அவர், “காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது” எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 5 இடங்களுக்கும் திமுகவே முழுமையான காரணம் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுகவின் களப்பணி மற்றும் ஆதரவு இல்லாமல் காங்கிரஸால் இந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியாது என்ற தொனியில் அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஒருமித்த கருத்துடன் பயணித்த கூட்டணியில், தேர்தல் முடிவுக்குப் பின் காங்கிரஸ் எடுத்துள்ள இந்த முடிவு திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் அரசியல் பிம்பத்தை நிலைநிறுத்துவதில் திமுகவின் பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ள சரவணன், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று கிண்டல் செய்து கொண்டிருந்தபோது, நமது தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதன்முதலில் அவரைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து அங்கீகாரம் தந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு நெருக்கமான நட்புறவில் இருந்தும், தற்போது காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாடு அரசியல் துரோகம் என அவர் சாடியுள்ளார்.

Soundarya

Recent Posts

ஆளுநருக்கு விஜய் மீண்டும் கடிதம்… என்ன காரணம் தெரியுமா..? நொடிக்கு நொடி பரபரப்பில் தமிழகம்…!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகச் சட்டமன்றத்…

46 minutes ago

BREAKING: காலையிலேயே ராகுலுக்கு அழைப்பு விடுத்தார் விஜய்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (மே 7) தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

51 minutes ago

BIG NEWS: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு..? மே-8 ஆம் தேதி வெளியாகாது… தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம்…

55 minutes ago

மு.க ஸ்டாலின் தோல்வி… அதிர்ச்சியில் உயிரிழந்த திமுக நிர்வாகி… தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மரணம்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக ஆட்சியை இழந்ததோடு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த செய்தி கேட்டு…

1 மணத்தியாலம் ago

“டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!… ஐடி கனவு நனவாகப்போகுது… ஐபிஎம் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

பிரபல முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் (IBM), தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்குத் தகுதியான…

1 மணத்தியாலம் ago

BREAKING: தவெக நிர்வாகிகள் 6 பேர் அதிரடி கைது… அதிர்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியை முன்னிட்டு ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின்…

1 மணத்தியாலம் ago