தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை அமைக்க உரிமை கோரி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் சூழலில், சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநர் மாளிகையின் அறிவுறுத்தலின்படி, ஏற்கனவே அனுப்பப்பட்ட புள்ளிவிவரக் கடிதத்தைத் தொடர்ந்து, தற்போது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துகள் மற்றும் அமைச்சரவை குறித்த விவரங்களுடன் கூடிய இரண்டாவது கடிதத்தையும் தவெக சமர்ப்பித்துள்ளது. மே 7-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், இன்று (மே 6) விஜய் நேரில் ஆளுநரைச் சந்தித்து முறைப்படி உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்துள்ளன.
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தங்களைச் சந்திக்க வருமாறு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர்…
சென்னை ஆர்.கே. நகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (மே 7) தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ள நிலையில், திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் தனது 'எக்ஸ்' (X)…