தமிழ் திரையுலகில் “இயக்குநர் இமயம்” என்று போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜா (84), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுடலுக்கு, முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கிராமியக் கதைகளையும், மண்வாசனை மாறாத வாழ்வியலையும் தமிழ் சினிமாவில் புரட்சிகரமாகப் பதிவு செய்த ஒரு மகா கலைஞனின் மறைவு, ஒட்டுமொத்தத் திரையுலகையும், ரசிகர்களையும் ஆழமான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்குப் பொதுமக்களும், திரையுலகப் பிரபலங்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபல இயக்குநர் கங்கை அமரன் மற்றும் பல முக்கியத் திரை நட்சத்திரங்கள் நேரில் வந்து தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 16 வயதினிலே, முதல் மரியாதை போன்ற காலத்தால் அழியாத காவியங்களைப் படைத்த இமயம் சரிந்த செய்தி அறிந்து, உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களின் அஞ்சலியைப் பகிர்ந்து வருகின்றனர்
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…