பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு..! மத்திய ஆயுதக் காவல் படையில் 349 காலிப்பணியிடங்கள்.. யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு.. முழு விவரம் உள்ளே…!!

Spread the love

மத்திய ஆயுத காவல்படை உதவித் தளபதி பதவிக்கான 349 காலிப்பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் எல்லை பாதுகாப்பு படை , மத்திய ரிசர்வ் காவல்படை , மத்திய தொழில் பாதுகாப்பு படை , சாஸ்திர சீமா பால் மற்றும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் ஆகிய பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் https://upsconline.nic.in/ என்ற இணையதளம் வழியாக மார்ச் 12-ம் தேதி மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது 2026-ல் தகுதி பெறுபவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2026 ஆகஸ்ட் 1-ம் தேதியின்படி 20 வயது நிறைந்தவராகவும், 25 வயதைக் கடந்திருக்கக் கூடாதவராகவும் இருக்க வேண்டும்; அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. மேலும், இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.200 ஆகும், ஆனால் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறையானது ஜூலை 19-ம் தேதி தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் எழுத்துத் தேர்வுடன் தொடங்குகிறது. இதில் கொள்குறி வகையில் 250 மதிப்பெண்களுக்கு முதல் தாளும் நெகட்டிவ் மதிப்பெண் உண்டு, பொது அறிவு விவரித்து எழுதும் வகையில் 200 மதிப்பெண்களுக்கு இரண்டாம் தாளும் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதிலும் தேர்வாகும் நபர்களுக்கு 150 மதிப்பெண்களுக்கு நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

Swetha

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

7 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

7 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

7 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago